- பஞ்சாயத்து
- நடுத்தரப் பள்ளி
- அறந்தாங்கி
- அரந்தாங்கி
- சட்டமன்ற உறுப்பினர்
- ராமச்சந்திரன்
- மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- பஞ்சாயத்து யூனியன்
- புதுக்கோட்டை மாவட்டம்
- பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி
- மேல்மங்கலம் ஊராட்சி
- பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி
அறந்தாங்கி, ஜூலை 22: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மேல்மங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டங்களை அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்தார். மேல்மங்களம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கூடுதலாக கட்டடம் வேண்டும் என அறந்தாங்கி எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பள்ளிக்கு அறந்தாங்கி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எம்எல்ஏ ராமச்சந்திரன் ரூ.24.40 லட்சம் நிதி வழங்கினார். இதில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது. இந்த 2 வகுப்பறைகளையும் எம்எல்ஏ ராமச்சந்திரன் திறந்து வைத்து மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் மகேஷ்வரி சண்முகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சுமதிமுத்து, ஊராட்சி தலைவர் மஞ்சுளாதேவி ரவிச்சந்திரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரிதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post அறந்தாங்கி அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் appeared first on Dinakaran.