×

பெருமூளை வாத நோயால் பாதித்த மாற்று திறனாளிக்கு கூகுளில் வேலை: பல்வேறு தடைகளை தாண்டி சாதனை

கவுகாத்தி: பல்வேறு தடைகளை தாண்டி ஐஐடியில் படிப்பை முடித்த பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் பிரணவ் நாயர்(22). பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட பிரணவ் எப்பொழுதும் சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் வெளியே செல்வார். இவருக்கு சிறிய வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. உடல் ரீதியான பிரச்னைகள் இருந்ததால் அவரை பள்ளியில் சேர்க்க பல பள்ளிகள் தயக்கம் காட்டின.ஓமனில் உள்ள மஸ்கட்டில் பள்ளி படிப்பை முடித்தார். அப்போது கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு துறையை தேர்ந்தெடுக்குமாறு அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

கம்ப்யூட்டர் கல்வியில் அதிக ஆர்வம் இருந்ததால்,சாப்ட்வேர் பொறியாளராக விரும்பினார்.அதிர்ஷ்டவசமாக கவுகாத்தியில் உள்ள ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஐஐடி இறுதியாண்டு படித்து வரும் பிரணவ் நாயர் கூகுள் நிறுவனம் நடத்திய வளாக நேர்முக தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். வரும் ஜூலை மாதம் பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர உள்ளார். உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் இடம் பெறுவதற்கான அவரது பயணம் எளிதானதாக இல்லை. ஆனால் அவரது பெற்றோர் மற்றும் நிறுவனத்தில் உள்ள ஆசிரியர்களின் ஆதரவுடன்,பல்வேறு தடைகளை தாண்டி தனது லட்சியத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

 

The post பெருமூளை வாத நோயால் பாதித்த மாற்று திறனாளிக்கு கூகுளில் வேலை: பல்வேறு தடைகளை தாண்டி சாதனை appeared first on Dinakaran.

Tags : Google ,Guwahati ,IIT ,Pranav Nair ,Kerala ,Pranav ,
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...