×

சில்லி பாயின்ட்…

* 434 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது, டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் வித்தியா அடிப்படையில் இந்தியா பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். முன்னதாக, நியூசிலாந்தை 372 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

* ஒரு டெஸ்ட் இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய இந்தியர் என்ற நவ்ஜோத் சிங் சாதனையை (8 சிக்சர்), ஜெய்ஸ்வால் நேற்று முறியடித்து முதலிடம் பிடித்தார்.

* கத்தார் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (10-8) என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்.

* ஆசிய குழு பேட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவு பைனலில் தாய்லாந்துடன் நேற்று மோதிய இந்தியா 3-2 என்ற கணக்கில் போராடி வென்று முதல் முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. ஒற்றையர் ஆட்டங்களில் பி.வி.சிந்து, அன்மோல் கார்ப், இரட்டையர் ஆட்டத்தில் த்ரீஸா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இந்திய அணிக்காக வெற்றிகளைக் குவித்தனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : England ,India ,New Zealand ,Dinakaran ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...