×

இந்தியா கூட்டணியின் கதவுகள் பகுஜன் கட்சிக்கு திறந்தே இருக்கிறது’

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் உ.பி மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே நேற்று அளித்த பேட்டி: உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியை காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரிக்கிறது. உ.பி.யில் பாஜவை எதிர்க்க தயாராக உள்ள சிறு கட்சிகளை இந்தியா கூட்டணியில் சேர்ப்பது குறித்து அவர்களுடன் சமாஜ்வாடியும், காங்கிரசும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. சில கட்சிகள் எந்த எதிர்பார்ப்புமின்றி கூட்டணியில் சேர உள்ளன. சிலருக்கு சில ஆசைகள் உள்ளது. இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும். பாஜவை எதிர்ப்பதில் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக இருந்தால், இந்தியா கூட்டணியில் மாயாவதி இணையலாம். இது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியின் கதவுகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எப்போது திறந்தே இருக்கிறது. இவ்வாறு அவினாஷ் பாண்டே கூறினார்.

The post இந்தியா கூட்டணியின் கதவுகள் பகுஜன் கட்சிக்கு திறந்தே இருக்கிறது’ appeared first on Dinakaran.

Tags : India alliance ,Bahujan Party ,New Delhi ,Congress ,general secretary ,UP ,Avinash Pandey ,Samajwadi Party ,BJP ,Dinakaran ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்