×

மும்பை சிறையில் இருந்த குமரி மீனவர்கள் விடுதலை

நாகர்கோவில்: குமரி மாவட்டம் கீழமணக்குடியை சேர்ந்தவர் சகாய ஆன்டனி, ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்த இன்பெண்ட் விஜய் ஆகியோர் குவைத்தில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த நிடிஷோ என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படாததாலும், சித்திரவதை செய்யப்பட்டதாலும் ஜனவரி 28ம் தேதி 3 பேரும் படகுமூலம் கடல் வழியாக இந்தியா வந்தனர்.

மும்பை எல்லைக்குள் பிப்ரவரி 6ம் தேதி புகுந்ததும் மும்பை கடலோர காவல் படை போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.அவர்களின் உறவினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் எம் பி நேற்று ஜாமீனில் எடுத்தார். இதனை தொடர்ந்து மூன்று பேரும் நாகர்கோவில் வந்தனர்.

The post மும்பை சிறையில் இருந்த குமரி மீனவர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Mumbai jail ,Nagercoil ,Sakaya Antony ,Geezamanakudi ,Kumari district ,Inbent Vijay ,Arogya Puram ,Kuwait ,Nidisho ,Thangachi Math ,Ramanathapuram district ,Mumbai ,jail ,Dinakaran ,
× RELATED நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள்