×

வேளாண்மை உதவி இயக்குநர் உள்பட 3 தேர்வுகளுக்கான ரிசல்ட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: வேளாண்மை உதவி இயக்குநர் பதவி உள்பட 3 தேர்வுகளுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மேலாண்மை விரிவாக்க பணிகளில் அடங்கிய வேளாண்மை உதவி இயக்குநர்(விரிவாக்கம்) பகுதியில் காலியாக உள்ள 20 பணியிடங்கள், தமிழ்நாடு தோட்டக்கலை பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவியில் 87 பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழித்தேர்வை கடந்த ஆண்டு மே 20 மற்றும் 21ம் தேதி தேதி நடத்தியது.

இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான பிற விதிகளின் அடிப்படையில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கு 80 பேரும், தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 118 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளம்(www.tnpsc) வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகள்(நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 761 பேரின் இருவழி தொடர்பு முறையில் பதிவெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மற்றும் நிறுவனத்தில் ஆராய்சி உதவியாளர் பதவியில் 14 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 28 பேரும், தமிழ்நாடு கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டமைப்பில் மேலாளர்(கால்நடை) பதவியில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 84 பேரும் கணினி வழிசான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்களின் பதிவெண்கொண்ட பட்டியலும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

The post வேளாண்மை உதவி இயக்குநர் உள்பட 3 தேர்வுகளுக்கான ரிசல்ட்டை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Selection Commission ,Tamil ,Nadu ,
× RELATED கணக்கு பணிகள் பதவிக்கு...