×

வங்கி அதிகாரிகள் டார்ச்சர் விஷம் குடித்து தம்பதி தற்கொலை

திருமலை: தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசரா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது மனைவி பாக்யா(40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டு தேவைக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்தி கடன் பெற்று வந்துள்ளனர். ஆனால் உரிய நேரத்தில் பணம் கட்ட முடியவில்லையாம். இதனால் வங்கி கடன் வசூலிக்கும் ஏஜென்சியினர் அடிக்கடி வீட்டுக்கு வந்து கிரெடிட் கார்ட் பில்தொகையை செலுத்தும்படி டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் சுரேஷ் தம்பதியினர் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. அவமானம் தாங்காமல் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் குழந்தைகளை அதேபகுதியில் உள்ள பாக்யாவின் தாய் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டு திரும்பியுள்ளனர். நேற்று கணவன், மனைவி இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

முன்னதாக அவர்கள், தங்கள் இறப்புக்கு வங்கி கிரெடிட் கார்டு அதிகாரிகளே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளனர். தகவலறிந்த கீசரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவன், மனைவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் எழுதிய கடிதத்தை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வங்கி அதிகாரிகள் டார்ச்சர் விஷம் குடித்து தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Suresh Kumar ,Keisara Village, Matsal District, Telangana State ,Bhagya ,
× RELATED பழுதான சாலையில் ஆம்புலன்ஸ் வர...