×

ராஜபாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

 

ராஜபாளையம், பிப். 18: ராஜபாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்பி தனுஷ் எம்.குமார், எம்எல்ஏ தங்கப்பாண்டியன், நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் கலந்துகொண்டனர்.
ராஜபாளையத்தில் ரூ.2.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ராஜபாளையத்தில் தீயணைப்பு நிலையம் கட்டிடம் சேதமடைந்து இருந்த நிலையில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்ற நிலையில் நேற்று புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு நிலையத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடத்தில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம் குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் விவேகானந்தன், ஜெயக்குமார், வருவாய் கோட்டாச்சியர் விசுவநாதன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். ராஜபாளையம் வட்டாட்சியர் ஜெயபாண்டி தீயணைப்பு துறை அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ராஜபாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,MLA ,Rajapaliam ,Chief Minister of ,Tamil ,Nadu ,Rajapalaya ,K. Stalin ,Dhanush M. Kumar ,Thangapandian ,Nagar Assembly ,President ,Bavithra Shiam ,MB ,
× RELATED மனைவியை எஸ்ஐ அபகரித்து விட்டார்: கணவர் போலீசில் புகார்