×

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

 

பரமக்குடி,பிப்.18: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல் 2024, உரிமை மீட்க ஸ்டாலின் குரல் பொதுக்கூட்டம் மற்றும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சிக்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரமக்குடி சட்டமன்றத் தொகுதி சார்பாக பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து எம்எல்ஏ முருகேசன் வரவேற்பு அளித்தார். போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன் உள்ளிட்ட போகலூர் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பரமக்குடி நகர் திமுக சார்பாக நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்எம்டி அருளானந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

The post ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Ramanathapuram ,Paramakudi ,Minister ,Udhayanidhi ,Ramanathapuram district ,Parliamentary Election 2024 ,Stalin ,DMK ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...