×

ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியால் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் 21ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

திருபுவனை, பிப். 18: கண்டமங்கலம் குறுக்கே புதுச்சேரி- விழுப்புரம் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனால் வரும் 21ம் தேதி முதல் புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்குவழி சாலை பணி மிக விரைவாக நடைபெற்று வரும் நிலையில், கண்டமங்கலம் குறுக்கே புதுச்சேரி- விழுப்புரம் ரயில்வே பாதை செல்கிறது. இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் மற்றும் பயணிகள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 21ம் தேதி முதல் விழுப்புரம்-புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கலித்தீர்த்தாள்குப்பம், குச்சிப்பாளையம், பிஎஸ்.பாளையம், வாதானூர், சோரப்பட்டு, செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, வில்லியனூர் வழியாக புதுச்சேரிக்கு செல்ல வேண்டும். புதுச்சேரி-விழுப்புரம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் சிவராந்தகம், கீழுர், மிட்டா மண்டகப்பட்டு பள்ளிநேலியனூர், திருபுவனைப்பாளையம் மற்றும் திருபுவனை வழியாக விழுப்புரம் செல்ல வேண்டும். மேலும், விழுப்புரம்- புதுச்சேரி செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், வனத்தாம்பாளையம், ரசபுத்திரப்பாளையம், சின்னபாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், பங்கூர் வழியாக புதுச்சேரிக்கு செல்ல வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியால் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் 21ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Puducherry-Villupuram ,21st ,Thirupuvanai ,Kandamangalam ,Puducherry-Villupuram road ,Puducherry National Highway Authority ,Dinakaran ,
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...