×

தென்காசி யூனியன் கூட்டம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தென்காசி, பிப். 18: தென்காசி யூனியன் கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தென்காசி யூனியன் கூட்டம் தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா தலைமையில் நடந்தது. பிடிஓ ராஜசேகரன், யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் கவிதா தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசுந்தரம், கலாநிதி, வினோதி ராமையா, செல்வநாயகம், மல்லிகாசரவணன், சுப்புலட்சுமி ஆனந்தராஜ், ப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 24 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஆசீர் டேவிட் ராஜதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவண சண்முகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தென்காசி யூனியன் கூட்டம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi Union ,Tenkasi ,President ,Vallam Sheikh Abdullah ,BDO Rajasekaran ,Union ,Vice President ,Kanakaraj Muthupandian ,Dinakaran ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...