×

தேசத்தை அழிக்க நினைக்கும் பாசிச சக்தியை விரட்ட காங்கிரசை வலுப்படுத்த வேண்டும்

*தென்காசி செயல்வீரர்கள் கூட்டத்தில் செல்வபெருந்தகை பேச்சு

தென்காசி : தேசத்தை அழிக்க நினைக்கும் பாசிச சக்தியை விரட்ட காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என தென்காசியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ பேசினார்.தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. தென்காசியில் நடந்த இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. பேசுகையில் ‘‘மாவட்டம்தோறும் ஆய்வு நடத்தி கட்சி தொண்டர்களின் விருப்பத்தை அறிந்து வருகிறோம். இம்மாவட்டத்தில் ஒரு காலத்தில் 5 தொகுதிகளில் தனியாக வெற்றி பெற்றிருக்கிறோம். காங்கிரசின் சித்தாந்தம் கொள்கை, கோட்பாடு அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.

அனைவருக்குமான கட்சி காங்கிரஸ். 2014ல் காங்கிரஸ் இருக்காது எனக்கூறிய மோடியும், அமித்ஷாவும் மக்களவையில் ராகுல் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மிரண்டுள்ளனர்.
தேசத்திற்காகவும், மக்கள் உழைப்பிற்காகவும் துவங்கப்பட்ட காங்கிரசுக்கான எதிர்காலம் மிகவும் அருகேயுள்ளது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இவற்றில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

யார் வரவேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர். மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல் என பாஜ ஆளும் பகுதிகளில் கூட இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 55 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் தொண்டர்கள் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதேபோல் மக்களுக்காக ராகுல் அயராது உழைத்து வருகிறார். காங்கிரசில் புதிய ரத்தம் பாய்ச்சப்படும். இளைஞர்களுக்கு பெரிய பதவிகள் வரும். இளைஞர்களையும், இளம் பெண்களையும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிறுத்த வேண்டும். காங்கிரசில் உள்ள முதியவர்கள்தான் கட்சியின் பாதுகாவலர்கள்.

முன்னாள் முதல்வர் காமராஜர் தொண்டர்களோடு தொண்டராக இருந்தார். தேசத்தை அழிக்க நினைக்கும் பாசிச சக்தியை விரட்ட காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் வலிமை பெற்றால் இந்தியா கூட்டணி வலிமை பெறும்.இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நாடு வலிமை பெறும். கட்சிக்காக உழைத்தவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள். யாரையும் விட்டுவிட மாட்டோம். தென்காசி மாவட்டம் கட்சியில் முதன்மை மாவட்டமாக இருக்க வேண்டும். ராகுல் கரத்தை பலப்படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்திலும் பாதயாத்திரை துவங்க வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன்,மாநில அமைப்பு செயலாளர் செங்கோட்டை ராம்மோகன், மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், சட்டமன்ற தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ, இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத், மாநில பொது செயலாளர் செல்வம், எம்.எஸ்.காமராஜ், மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், நான்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், மாவட்ட பொருளாளர் முரளிராஜா, சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளிமுருகன், செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கொடிக்குறிச்சி முத்தையா,

எஸ்.கே.டி.பி.காமராஜ், மாநில நிர்வாக குழு டாக்டர் சங்கரகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், கடையநல்லூர் சுந்தரையா, கிளாங்காடு மணி, சிவகிரி கணேசன், அகரக்கட்டு கார்வின், கவுன்சிலர்கள் ஆனந்த பவன் காதர்மைதீன், ரபீக், மஞ்சுளா, சுப்பிரமணியன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பூமாதேவி, மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், பேச்சாளர்கள் ஆலடிசங்கரையா, பால்துரை, ஜேம்ஸ், நகர தலைவர்கள் மாடசாமி ஜோதிடர், அபுதாகிர், பொருளாளர் ஈஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் ஷர்புதீன், மஸ்தான், சமுத்திரம், முகமதுரபி, ரமேஷ், சுரேஷ்,

ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் பைசல் சாகுல்ஹமீது, மாடசாமி, வட்டார தலைவர்கள் குற்றாலம் பெருமாள், கதிரவன், ஜெகநாதன், எஸ்.சி.எஸ்.டி ராமச்சந்திரன், வக்கீல் காசிபாண்டியன், சங்கை கணேசன், பாக்யராஜ், மாரிக்குமார், அப்துல்காதர், வைகுண்டராஜா, சுரேஷ் இளவரசன், பெரியசாமி, இளைஞர் காங்கிரஸ் பிரேம்குமார், கமலிகா காமராஜ், தேவேந்திரன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் நன்றி கூறினார்.

The post தேசத்தை அழிக்க நினைக்கும் பாசிச சக்தியை விரட்ட காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Congress ,Selvaperunthakai ,Tenkasi ,State ,President ,MLA ,Dinakaran ,
× RELATED திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த...