×

பாரம்பரிய உணவுத் திருவிழா

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்த பொன்னம்மாபுதூர் விவேகா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் பாண்டுரங்க குப்தா தலைமை வகித்தார். தாளாளர் சந்திரகலா நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் சித்த மருத்துவர் சிவராமன், பாரம்பரிய உணவுத் திருவிழாவை துவக்கி வைத்து, பாரம்பரிய உணவும், ஊட்டச்சத்தும் என்ற தலைப்பில் பேசினார். இதில் மாணவ, மாணவிகள் அரிசி, பருப்பு வகைகள், சிறுதானிய வகைகள், மரபு தின்பண்டங்கள் என பல வகையான பாரம்பரிய உணவுகளை காட்சிக்கு வைத்திருந்தனர். அவற்றை சித்த மருத்துவர் சிவராமன் பார்வையிட்டு, சிறந்த உணவுகளை தயார் செய்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் வண்ணம் பெமிநயம் நிறுவனர் கோமதி, சிரிப்பு யோகா புகழ் ராஜேந்திரன், பள்ளியின் இயக்குனர் சந்தோஷ் குமார், முதல்வர் சாந்தி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். …

 

The post பாரம்பரிய உணவுத் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Ponnammaputhur Viveka Matriculation School ,School Secretary ,Panduranga Gupta ,Chancellor ,Chandrakala Nagarajan ,Siddha doctor ,Sivaraman ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை