×

பெங்களூரு ஓபன் சுமித் நாகல் ஏமாற்றம்

பெங்களூரு: ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடர் பெங்களூரு ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், இந்திய வீரர் சுமித் நாகல் போராடி தோற்றார். அரையிறுதியில் இத்தாலியின் ஸ்டெபானோ நெபோலிடானோவுடன் (28 வயது, 7வது நிலை) நேற்று மோதிய சுமித் நாகல் (26 வயது, 2வது நிலை) டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 6-7 (2-7) என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். 2வது செட்டிலும் நாகலின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து முன்னேறிய நெபோலிடானோ 7-6 (7-2), 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 17 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவின் சியோங்சான் ஹாங் (26 வயது) 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஓரியோல் ரோகா படல்லாவை வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 7 நிமிடத்துக்கு நீடித்தது. இன்று நடைபெறும் பைனலில் நெபோலிடானோ – சியோங்சான் ஹாங் மோதுகின்றனர்.

The post பெங்களூரு ஓபன் சுமித் நாகல் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Bengaluru Open ,Sumit Nagal ,Bengaluru ,ATP Challenger Tennis Series Bangalore Open ,Dinakaran ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...