×

சில்லி பாய்ன்ட்…

* மலேசியாவின் செலங்கூர் நகரில் நடக்கும் ஆசிய அளவிலான குழு பேட்மின்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய ஆண்கள் அணி காலிறுதியில் ஜப்பானிடம் தோற்று வெளியேறிய நிலையில், மகளிர் பிரிவு அரையிறுதியில் நேற்று ஜப்பான் அணியுடன் நேற்று மோதிய இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறி உள்ளது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா – தாய்லாந்து மோதுகின்றன.
* பஞ்சாப் அணிக்கு எதிராக சேலத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 435 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்திரஜித் 187 ரன் (295 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), விஜய் ஷங்கர் 130 ரன் (271 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 281 ரன் குவித்தனர். முன்னதாக சண்டிகருக்கு எதிராக கோவையில் நடந்த ஆட்டத்தில் நாராயண் ஜெகதீசன் – பாபா இந்திரஜித் இணை 3வது விக்கெட்டுக்கு 280 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது. 2வது நாள் ஆட்ட முடிவில் பஞ்சாப் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்துள்ளது (46 ஓவர்).
* புதுச்சேரியில் நடக்கும் டி பிரிவு லீக் ஆட்டத்தில் இமாச்சல் முதல் இன்னிங்சில் 463 ரன் குவித்த நிலையில், புதுச்சேரி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து திணறி வருகிறது.
* பெர்த்தில் தென் ஆப்ரிக்க மகளிர் அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 284 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. தென் ஆப்ரிக்கா 76 & 215; ஆஸ்திரேலியா 575/9 டிக்ளேர் (சதர்லேண்ட் 210, கேப்டன் அலிஸ்ஸா ஹீலி 99, பெத் மூனி 78, கார்டனர் 65, கிம் கார்த் 49*).
* முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் நியூசிலாந்து வேகம் கைல் ஜேமிசன் மிக நீண்ட ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
* கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட கஜகஸ்தானின் எலனா ரைபாகினா – இகா ஸ்வியாடெக் (போலந்து) தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதியில் ரைபாகினா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்திய நிலையில், ஸ்வியாடெக்குடன் மோத இருந்த கரோலினா பிளிஸ்கோவா (செக்.) காயம் காரணமாக விலகினார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Japan ,Asian Group Badminton Tournament ,Selangor, Malaysia, ,India ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...