×

அமலாக்கத் துறை வழக்கு காணொலி மூலம் கெஜ்ரிவால் ஆஜர்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி.யான சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை ஏற்கனவே 5 முறை சம்மன்களை அனுப்பியும், அவர் ஆஜராகாவில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்கோத்ரா, பிப்ரவரி 17ம் தேதி நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார்.

ஆனால்,நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கான தீர்மானத்தை முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் பங்கேற்பதால் நீதிமன்றத்தில் நேரடியாக அவரால் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதனால், காணொலி மூலமாக கெஜ்ரிவால் ஆஜரானார்.

The post அமலாக்கத் துறை வழக்கு காணொலி மூலம் கெஜ்ரிவால் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Kejriwal Ajar ,Enforcement Department ,New Delhi ,Former ,Deputy Chief Minister ,Sisodia ,Aam ,Aadmi ,Party ,Rajya ,Sabha ,Sanjay Singh ,Chief Minister ,Kejriwal ,
× RELATED நீரிழிவு பாதித்துள்ள கெஜ்ரிவால்...