×

இஸ்லாமியர்களுக்கு முத்தான அறிவிப்புகள் முதல்வர் எங்களை திக்குமுக்காட செய்துவிட்டார்: பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் பேட்டி

சென்னை: சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்றபின் பல்சமய நல்லுறவு இயக்கம் நிறுவனத் தலைவர் கோவை ஹாஜி ஜே.முகம்மது ரபிக் அளித்த பேட்டி: முதல்வர் இஸ்லாமியர்களுக்கு முத்தான, இனிப்பான அறிவிப்புகளை அறிவித்து எங்களை திக்குமுக்காட செய்துவிட்டார். அவருக்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் கோடனானு, கோடி நன்றி. சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கு ஒன்றிய பாஜ அரசு கல்வி மானியத்தை ரத்து செய்து விட்டது. அந்த தொகையை தமிழக அரசே வழங்கும் என்றும், கல்வி கடன் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். தமிழகம் முழுவதும் கபர்ஸ்தான் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளிவாசல்கள் கட்ட விதிகள் தளர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனே அறிவிப்புகளாக வெளியிட்டு சிறுபான்மை மக்களின் ஒரே காவலன் என்பதை நிரூபித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முஸ்லிம்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும். கோவையில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வர் விரைவில் நிறைவேற்றி தருவார் என நம்புகிறோம்.

The post இஸ்லாமியர்களுக்கு முத்தான அறிவிப்புகள் முதல்வர் எங்களை திக்குமுக்காட செய்துவிட்டார்: பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM ,Interfaith Movement ,President ,CHENNAI ,Chief Secretariat ,Chief Minister ,M. K. Stalin ,Multifaith Movement Coimbatore ,Haji J. Mohammad Rabiq ,Muslims ,
× RELATED செல்வப்பெருந்தகை விமர்சனம்; வஞ்சக...