×

புழல் சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் ஏலம்

புழல்: புழல் மத்திய சிறை விசாரணை கண்காணிப்பாளர் பரசுராமன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புழல் மத்திய விசாரணை சிறையில் பயன்படுத்தி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் பழுதடைந்து உள்ளது. இதனால ஆம்புலன்ஸ் வாகனத்தை மார்ச் 15ம் தேதி விசாரணை சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 செலுத்தி, மார்ச் 15ம் தேதி காலை 11 மணிக்குள் விசாரணை சிறை அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கட்டணம் செலுத்தவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் முடிந்தவுடன் எடுக்காதவர்களின் கட்டண தொகை திருப்பிக் கொடுக்கப்படும். ஏலத்தில் வாகனத்தை எடுப்பவர் தனது சொந்த செலவில் சிறையில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டும். ஏலத்தொகை ஏற்றுக் கொள்வதற்கு அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் ஏல தொகையினை வரிகள் உட்பட செலுத்தி வாகனத்தை பெற்று செல்ல வேண்டும். குறிப்பிட்ட தினத்தில் ஏலத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளாவிட்டால், செலுத்திய தொகை பறிமுதல் செய்ததோடு அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பு தொகையும் சம்பந்தப்பட்ட நபரிடம் வசூலிக்கப்படும்.

ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், விசாரணை சிறையில் உள்ள அலுவலக நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறை கண்காணிப்பாளர் முன் அனுமதி பெற்று சிறை துணை அலுவலர் மற்றும் சிறை அலுவலர் முன்பு வாகனத்தை பார்வையிடலாம். இவ்வாறு புழல் மத்திய சிறை விசாரணை கண்காணிப்பாளர் பரசுராமன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்

The post புழல் சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Puzhal ,Puzhal Central Jail Investigation ,Superintendent ,Parasuraman ,Puzhal Central Jail ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்