×

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ரூ.159 கோடி செலவில் திட்டப் பணிகள்: முதல்வர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார், அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏ அடிக்கல் நாட்டினர்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானியம்மன் கோயில் வளாகத்தில் ரூ.159 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
பெரியபாளையம் பவானியம்மன் கோயில் பெருந்திட்ட வளாக பணிகளில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.

இதனையடுத்து பவானியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டினர். அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, அறநிலையத்துறை துணை ஆணையர் சித்ரா தேவி, அறங்காவலர் குழு இந்து அஞ்சன் லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில் தாசில்தார் வாசுதேவன், பிடிஒ சத்தியமூர்த்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் சத்தியவேலு, பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிகுமார், லோகேஷ், சங்கர், வக்கில் சீனிவாசன், பேரூர் செயலாளர் அபிராமி, ஒன்றிய நிர்வாகிகள் சம்பத், முனிவேல், ரவிச்சந்திரன், அப்புன், வேலு, சுமன், ஒன்றிய கவுன்சிலர் புஷ்பா முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பூந்தமல்லி: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரண்வாயல்குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைககள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.28 லட்சம் நிதியும், அதே போல் அரண்வாயல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைககள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.28 லட்சம் நிதியும், புட்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறைககள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.28 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்ததையடுத்து நேற்று முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனையடுத்து அரண்வாயல்குப்பம், அரண்வாயல், புட்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பார்வையிட்டார். இந்த விழாக்களில் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், விமல் வர்ஷன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், ரவி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) மோகனா, வட்டார கல்வி அலுவலர் வீரராகவன், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வாசுதேவன், ரா.தாஸ், ஒன்றிய கவுன்சிலர் நவமணி,

ஊராட்சி மன்ற தலைவர்கள் காவேரி அன்பழகன், லோகாம்பாள் நிர்வாகிகள் சௌந்தர், தரணி, சீனிவாசன், அபினாஷ், மேகநாதன், மோகன்தாஸ், அப்புன்ராஜ், முருகேசன், ஆறுமுகம், சங்கர், வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் ரகு, வினோத்குமார், ஆசிரியர்கள் மாலா, ஜெயக்குமாரி, திலகவதி, ரக்ஷிதா, கீதா, சங்கீதா, தரணி, இன்பநேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பட்டு: கேசவராஜுகுப்பம் கிராமத்தில் நியாய விலை கடை கட்டிடம், பெருமாநல்லூரில் அங்கன்வாடி மையம், பள்ளிகளில் சத்துணவு சமையல் கூடங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் அடிப்படையில், கொல்லாலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா லோகநாதன், வட்டார கல்வி அலுவலர் சண்முகராஜ், திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தண்டபாணி ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அதேபோல, சாமந்தவாடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுகுணா நாகவேலு, ஊராட்சி மன்ற தலைவர் லதா ரமேஷ் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு இனிப்பு வாங்கினர். பெருமாநல்லூரில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழாவில் ஒன்றிய கவுன்சிலர் நதியா நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர்.

The post பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் ரூ.159 கோடி செலவில் திட்டப் பணிகள்: முதல்வர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார், அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏ அடிக்கல் நாட்டினர் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam Bhavaniyamman Temple ,Chief Minister ,MLA ,Oothukottai ,Tamil Nadu ,M.K.Stalin ,Periyapalayam Bhavaniyamman temple complex ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...