×

கீழே விழுந்து விபத்து ஏற்படுத்துமா? திருமங்கலம் காவல் நிலைய அறிவிப்பு பலகையால் அச்சம்

அண்ணாநகர்: உயரமான இடத்தில் வைத்துள்ள காவல் நிலைய அறிவிப்பு பலகை கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். திருமங்கலத்தில் நான்கு தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் கீழ்தளத்தில் திருமங்கலம் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையம் செயல்படுகிறது. 2வது தளத்தில் உதவி ஆணையர் அலுவலகமும், மூன்றாம் தளத்தில் இணை ஆணையர் அலுவலகமும், நான்காவது தளத்தில் போக்குவரத்து காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இதனால் புகார் கொடுக்க காவல் நிலையம் வருகிற பொதுமக்களுக்கு எந்தெந்த காவல் நிலையம் எங்கு செயல்படுகிறது என தெரிந்துகொள்ள வசதியாக உயரமான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது, காற்று அதிகமாக வீசும்போது கீழே விழுந்து பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள், புகார் மனு கொடுக்க வருகிறவர்கள் கூறுகையில், ‘‘நான்கு தளம் கொண்ட கட்டிடத்தில் திருமங்கலம் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. மேற்கு இணை ஆணையர் அலுவலகம், உதவி ஆணையர் அலுவலகம், சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலகம், போக்குவரத்து அலுவலகம் இயங்குகிறது. புகார் கொடுக்க வருபவர்கள் சிரமமின்றி செல்வதற்கு லிப்ட் வசதி கூட ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் வசதிக்காக காவல்நிலையம் அருகே உயரமான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் காற்று வீசும்போது கீழே விழுந்து விபத்து ஏற்படும் ஆபத்துள்ளது. எனவே உயரமான பலகையை கீழே வைக்க வேண்டும்’ என்றனர்.

The post கீழே விழுந்து விபத்து ஏற்படுத்துமா? திருமங்கலம் காவல் நிலைய அறிவிப்பு பலகையால் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam police station ,Annanagar ,Tirumangalam ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...