×

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க முடிவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 23 தமிழக மீனவர்களை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதில், 20 மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும், படகோட்டிகள் ராபர்ட், பெக்கருக்கு தலா 6 மாதம் சிறை, 2வது முறையாக கைதானதால் மீனவர் மெல்சனுக்கு, 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை ராமேஸ்வரம் கடற்கரையில் கூடிய விசைப்படகு மீனவர்கள், சங்கப்பிரதிநிதிகள் அவசரஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், கடலுக்கு படகுகளை அனுப்பாமல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரை நிறுத்தப்பட்டன. மேலும், காலவரையற்ற வேலை நிறுத்தம், படகுகளில் கருப்புக்கொடி ஏற்றுதல், கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பது மற்றும் நாளை மறுநாள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி செல்வது என தீர்மானிக்கபட்டது. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட 3 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.

The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Kachativu festival ,Rameshwaram ,Sri Lankan Navy ,Bakhjalasanti Sea ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...