×

குழந்தைகள் கடத்தலா? போலி வீடியோ பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை

ஆவடி: சென்னையில் சில இடங்களில் கடந்த சில நாட்களாக வடமாநில நபர்கள் குழந்தைகளைக் கடத்துவது போன்று சில வீடியோக்கள், ஆடியோக்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தன. இவை பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், குழந்தைகள் கடத்துவது போன்று பரப்பப்பட்ட வீடியோ போலி என தெரிய வந்தது. இந்நிலையில், இதுபோன்று போலி வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, எண்ணூர், சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய குழந்தைகள் பிரகதி, சன்சிதா என இரு மகள்கள் ஜோதி நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 12ம் தேதி திங்கள்கிழமை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தனர். பின், ஜோதி நகர் 4வது தெருவில் உள்ள தனலட்சுமி என்பவரிடம் ஹிந்தி வகுப்புக்கு செல்லும் போது, மாலை 4.38 மணி அளவில் ஜோதி நகர் முருகன் கோவில் அருகில் வைத்து காரில் வந்த ஒரு மர்ம நபர் பானிபூரி வாங்கி தரேன் வா என குழந்தைகளை கூப்பிட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் செல்வி என்பவர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிசிடிவியை ஆய்வு செய்ததில், இது போன்ற நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். எனவே பொதுமக்கள் இந்த ஆடியவை நம்பவேண்டாம் என ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் கேட்டு கேட்டுக்கொண்டார். மேலும், இது போன்ற வதந்திகளை பரப்பவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் எச்சரித்துள்ளார்.

* தெலங்கானாவை சேர்ந்த வாலிபர் மீது தாக்குதல்
தெலங்கானாவை சேர்ந்தவர் சின்னையா (36), பெற்றோரிடம் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக கோபித்துக் கொண்டு சென்னைக்கு வேலை தேடி ரயில் ஏறி திருவொற்றியூருக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். ரயில் நிலையத்திலிருந்து நடந்து கிராமத்து வழியாக சென்றபோது சிலரிடம் ஏதோ விலாசம் கேட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த பகுதியில் குழந்தை கடத்தல் சம்பந்தமாக வீடியோ பரவி பொதுமக்களிடையே பீதி ஏற்படுத்திய நிலையில் சின்னையா விலாசம் கேட்டபோது பார்ப்பதற்கு அலங்கோலமாக இருந்ததால் சந்தேகப்பட்டிருந்த பொதுமக்கள் குழந்தை பிடிக்க வந்த ஆசாமியாக இருப்பார் நினைத்து கூச்சலிட்டு அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பிறகு திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சின்னய்யாவை மீட்டு விசாரித்தபோது தனது விவரங்களை தெரிவித்துள்ளார். பிறகு பொதுமக்களை சமாதானம் செய்து காயமடைந்த சின்னயாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

The post குழந்தைகள் கடத்தலா? போலி வீடியோ பரப்பினால் கடும் நடவடிக்கை: ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Police Commissioner ,Northern states ,Chennai ,WhatsApp ,Avadi Police Commissioner ,Dinakaran ,
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...