×

ரத்ததான முகாம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் ஆண்டு‌ விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமை, செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியாளர் நாராயண சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் சங்க மாநில தலைவர் வெள்ளைசாமி, மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் குப்பன், மாவட்ட செயலாளர் கண்ணன், கவுரவத் தலைவர் சரஸ்வதி ஸ்டீபன், துணைத்தலைவர் ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

The post ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Tamil Nadu Cable TV Operators Association ,Tamil Nadu ,Cable TV Operators Public Welfare Association ,Chengalpattu district ,
× RELATED செங்கல்பட்டில் சினிமா டிக்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு