- சாத்தூர் பட்டாசு
- விருதுநகர்
- விருதுநகர் மாவட்டம்
- ராமுத்தேவன்பட்டி
- வெம்பகோட்டை, விருதுநகர் மாவட்டம் சாத்தூர்
- மரணம்
- தின மலர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 4 காயம் அடைந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிசிக்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின எனவும் தெரிவிக்கப்படுகிறது. அறையில் வெடிமருந்து கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
The post விருதுநகர் அருகே சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு.! 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.