×

500 விக்கெட் வீழ்த்தி சாதனை;அஸ்வினுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்.! ஆஸி. வீரர் நெகிழ்ச்சி

மும்பை: தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9வது வீரர் என்ற பெருமையையும், அதிவேகமாக வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். இதையடுத்து பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன்லயான், அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அதில், “அஸ்வின் நீங்கள் 500 விக்கெட் என்ற மைல் கல்லை எட்டியதற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த வெற்றிப் பயணத்தை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றேன். உங்கள் மீது எனக்கு அவ்வளவு மரியாதை இருக்கிறது. உங்களுக்கு எதிராக நான் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். அது மட்டும் இல்லாமல் உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றேன். வாழ்த்துக்கள் இன்னும் நிறைய விக்கெட்டுகள் உங்களுக்கு வந்து சேரும்’’ என்று கூறி உள்ளார். இதேபோல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அனில் கும்ப்ளே “அஸ்வின் ஒரு சாம்பியன் வீரர்.

கற்றலை என்றுமே நிறுத்தாத அவர் ஒரு சாம்பியன். இந்த 500 விக்கெட் கிளப்பில் இன்னொரு ஒரு இந்தியன் வந்து இணைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக’’ தெரிவித்திருக்கிறார். அஸ்வின் ஒரு மிகப்பெரிய உச்சத்தை தொட்டு கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். சென்னையில் இருந்து கிரிக்கெட்டின் உயரத்திற்கு அஸ்வின் சென்ற இந்த பயணத்தை பாராட்டுவதாக தினேஷ்கார்த்திக் கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா கூறுகையில், “அஸ்வினின் இந்த சுழற் பந்துவீச்சு பயணம் அனைவரையும் உற்சாகப்படுத்துவதாகவும் தொடர்ந்து இதே போல் செயல்படுங்கள் என்றும்’’ பாராட்டி இருக்கிறார்.

The post 500 விக்கெட் வீழ்த்தி சாதனை;அஸ்வினுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்.! ஆஸி. வீரர் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Mumbai ,Tamil Nadu ,Ravichandran Ashwin ,Dinakaran ,
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...