×

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டில் நகை பணம் கொள்ளை

பஞ்ச்குலா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங். இவருக்கு சொந்தமான அரியானா மாநிலம் பஞ்ச்குலாவின் எம்டிஏசெக்டாரில் உள்ள வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் திருடுபோய் உள்ளது.

இதுபற்றி யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், வீட்டு வேலை செய்து வந்த லலிதா தேவி மற்றும் பீகாரைச் சேர்ந்த சமையல்காரர் சில்தார் பால் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டில் நகை பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Yuvraj Singh ,Panchkula ,cricket ,MTAsector ,Panchkula, Ariana ,Yuvraj ,Dinakaran ,
× RELATED கோடை கால இலவச பயிற்சி மாவட்ட அணிக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு