×

விழிஞ்சம் கடற்கரை பகுதியில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை : விழிஞ்சம் கடற்கரை பகுதியில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 14-வது குற்றவாளியான ஆதிலிங்கம் மீது கொச்சின் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. வழக்கில் 16 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆதிலிங்கம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post விழிஞ்சம் கடற்கரை பகுதியில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Vigilance ,Chennai ,Cochin National Intelligence Organization ,Adilingam ,Beach ,Dinakaran ,
× RELATED பஸ் டிப்போவில் விஜிலென்ஸ் விசாரணை