×

டெல்லியில் 5வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: போலீசார் தாக்குதலில் காயமடைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை!!

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தா உள்ள நிலையில், போலீசார் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் 5வது நாளாக போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஒன்றிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் எல்லையில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் தாக்குதலில் 400க்கும் அதிகமான விவசாயிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றனர். கண்ணீர் புகைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 65 வயதான யான் சிங் பஞ்சாப் விவசாயி உயிரிழந்தார். ஜம்பு எல்லைக்கு கொண்டுவரப்பட்ட விவசாயி உடலுக்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் காயமடைந்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பஞ்சாப்-ஹரியானா எல்லையான ஜம்பு பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்காலிக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் தாக்குதல் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதனிடையே டெல்லியில் ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.

The post டெல்லியில் 5வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: போலீசார் தாக்குதலில் காயமடைந்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை