×

சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் முடக்கம் : உயர்கல்வித்துறை விளக்கம்

சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது குறித்து தமிழக உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,”வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம்; கால நீட்டிப்பு கோரி வருமான வரித்துறையிடம் தமிழக அரசின் அதிகாரிகள், பல்கலை. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறைக்கு ஆவணம் தாக்கல் செய்யப்படாததால் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் முடக்கம் : உயர்கல்வித்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai University ,Higher Education Department ,Chennai ,Tamil Nadu Higher Education Department ,Income Tax Department ,Tamil Nadu Government ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...