×

நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டிக்கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்

*ஆந்திராவில் பரபரப்பு

திருமலை : நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை வெட்டிக்கொன்று கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கடியம் மண்டலம் கடியபுசாவரத்தை சேர்ந்தவர் சூரிபாபு (40), இவருக்கும் அதேகிராமத்தை சேர்ந்த சத்ய(33) என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு 8ம்வகுப்பு படிக்கும் மகனும், 5வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களாக சூரிபாபுவுக்கு தனது மனைவி மீது நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், மனைவி போனில் பேசிய வருவதை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 14ம்தேதி இதுகுறித்து இத்தம்பதியினருக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதில் சத்யஸ்ரீ கணவனிடம் கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் அருகே உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து நேற்று காலை சூரிபாபு தனது மனைவியை சமாதானம் செய்து பிள்ளைகளையுடன் தனது தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சூரிபாபு தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சத்யயை வெட்டி தப்பி சென்றுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டிஎஸ்பி அம்பிகா பிரசாத், இன்ஸ்பெக்டர் துளசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சூரிபாபுவை வலை வீசிதேடி வந்தனர். இந்நிலையில் மனைவியை கொலை செய்த சூரிபாபு பாலில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்ததாக அவரின் உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவரை ராஜமகேந்திராவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் பாதி வழியிலேயே சூரிபாபு உயிரிழந்தார்.

இதனை அறிந்த போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்த கணவன் அவரை வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டிக்கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன் appeared first on Dinakaran.

Tags : Andhra Tirumala ,Andhra ,Suribabu ,Kadiyapusavaram, East Godavari District, ,Andhra State ,Kadiyam Mandal ,
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்