×

தோகைமலை ஒன்றியம் கழுகூர், சேப்ளாப்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள்

*மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு

தோகைமலை : தோகைமலை ஒன்றியத்தில் உள்ள கழுகூர் மற்றும் சேப்ளாப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தமிழ்நாடு அரசின் வழிபாட்டுதல்படி பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் உத்தரவின் பேரில் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் அய்வு செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கழுகூர் ஊராட்சியில் உள்ள மேலகம்பேஸ்வரம் ரோடு முதல் முனையம்பட்டி வழியாக மாகாளிபட்டி வரை (எம்.ஜி.எஸ்.எம்.டி) முதலமைச்சாpன் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட்ட பகுதியை மாவட்ட திட்ட இயக்குநர் லேகா தமிழ்செல்வன் ஆய்வு செய்தார். அப்போது ஏற்கனவே அமைக்ப்பட்ட தார்சலை தரமாக உள்ளதா என்றும், அரசு அனுமதிக்கப்பட்டு உள்ள அளவீடுகளில் சாலைகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

இதேபோல் சேப்ளாப்பட்டி ஊராட்சியில் வௌ்ளமடை முதல் சேப்ளாப்பட்டி வரை( எம்.ஜி.எஸ்.எம்.டி) முதலமைச்சாின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சத்து 53ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியை ஆய்வு செய்த மாவட்ட திட்ட இயக்குநர் லேகா தமிழ்செல்வன் சாலைகளின் தரங்கள் குறித்து பார்வையிட்டார். இதேபோல் சேப்ளாப்பட்டியில் துணை சுகாதார நிலையத்தில் என்என்டி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது கட்டிடங்களை தரமாகவும், பணிகளை விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்றார். மேலும் சேப்ளாப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எம்.ஜிஎன்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதில் அரசு அனுமதி வழங்கி உள்ள அளவிற்கும், பணிகள் தரமாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். தொடர்ந்து அதேபகுதியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய நூலகக்கட்டிம், எஸ்பி.எம் நிதியின் கீழ் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடந்து புதிய கழிப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

இதேபோல் பழுதான அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஆய்வு செய்த மாவட்ட திட்ட இயக்குநர் லேகா தமிழ்செல்வன், பழுதான அங்கன்வாடி மையக்கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைக்க ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், பாலச்சந்தர், உதவி பொறியாளர்கள் பொியசாமி, செல்வி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், இந்திராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா காமராஜ், ஊராட்சி செயலாளர் முருகானந்தம், வரதராஜ், ஒப்பந்ததாரர்கள் எஸ்ஆர் மற்றும் பாண்டியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post தோகைமலை ஒன்றியம் கழுகூர், சேப்ளாப்பட்டி ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.

Tags : Kalgoor ,Cheplapatti ,Tokaimalai Union ,Tokaimalai ,Kagalgur ,Karur District Thokaimalai Union ,Thokaimalai Union ,Dinakaran ,
× RELATED சுனைநீரில் மூழ்கி முதியவர் பலி