×

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி: சென்ட்ரல்- அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள் இன்று இரவு ரத்து!

சென்னை: ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்ட்ரல்- அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள் இன்று இரவு ரத்து செய்யப்படுகிறது. இரவு 9.45 மணி முதல் இரவு 11.55 மணி வரை இயக்கப்படும் 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளுரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி: சென்ட்ரல்- அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள் இன்று இரவு ரத்து! appeared first on Dinakaran.

Tags : Avadi ,Central-Arakkonam ,CHENNAI ,Central- ,Arakkonam ,Dinakaran ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!