×

விழுப்புரம் மாவட்ட தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூ.26.50 லட்சம் மோசடி

விழுப்புரம்: விழுப்புரம் ரங்கசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆனந்த்பிரபு என்பவரிடம் நூதன முறையில் ரூ.26.50 லட்சம் மோசடி செய்துள்ளனர். பிளாக் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ராஜா ஆனந்த்பிரபுவுக்கு மர்ம நபர் லிங்க் அனுப்பினார். வாட்ஸ்-அப் மூலம் ராஜா ஆனந்த்பிரபு தனது வங்கிக் கணக்குகளை மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். ராஜா ஆனந்த்பிரபு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட செயலியில் இருந்து 10 தவணைகளாக ரூ.26.50 லட்சம் அனுப்பியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தொழிலதிபர் ராஜா ஆனந்த்பிரபு விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

The post விழுப்புரம் மாவட்ட தொழிலதிபரிடம் நூதன முறையில் ரூ.26.50 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Raja Anandprabhu ,Viluppuram Rangasamy ,WhatsUp ,Viluppuram District ,Dinakaran ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...