×

மாநகராட்சி மண்டல கூட்டம்

தில்லைநகர்: திருச்சி மாநகராட்சி ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் உதவி ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலையில் மண்டல கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வார்டு குழு சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விரைந்து முடிக்க வேண்டும், நடைபெற உள்ள குழுமாயி மற்றும் குழுந்தலாயி அம்மன் கோயுல் திருவிழாவை முன்னிட்டு சாலை பணிகளை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் கடும் அச்சமும் ஏற்படுகிறது, அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும், கூட்டத்தில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஒரு மனதாக கோரிக்கை வைத்தனர்.

The post மாநகராட்சி மண்டல கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Corporation Zone Meeting ,Thillainagar ,Trichy Municipal Corporation ,president ,Vijayalakshmi Kannan ,Venkatraman ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு...