×

தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

ஓசூர்: ஓசூர் காந்தி சிலை அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிஐடியூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில், தொழிலாளர், மக்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்த கூடாது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடு, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை 100 சதவீதம் அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை அரசு துறைகளை தனியாருக்கு விற்பதை கைவிடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.

The post தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Gandhi ,Thomsa District Council ,Gopalakrishnan ,CITU District ,Sridhar ,AIDUC District ,Mathayan ,Dinakaran ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு