×

மூணாறு மலை பகுதியில் அஜாக்கிரதையாக ஜீப் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை

மூணாறு, பிப். 17: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மலையோர பகுதி என்பதால் ஏராளமான மலை குன்றுகள் உள்ளன. மூணாறு, மறையூர், வட்டவடை, வாகமன் போன்ற பகுதிகளில் உள்ள கரடு முரடான மலை குன்றுகளில் பயணம் செய்ய ஏராளமான சவாரி ஜீப்கள் உள்ளன. இந்த நிலையில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஜீப்கள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் ‘ஆபரேஷன் சஃபாரி’ என்ற பெயரில் சாலைகளில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்லூரி மாணவர்களை வாகனத்தில் வைத்து கொண்டு மாட்டுப்பட்டி சாலையில் ஜீப் அதிவேகமாக ஆபத்தான முறையில் சென்ற வீடியோ மோட்டார் வாகன துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அதிவேகமாகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய பள்ளிவாசல் ஆற்றுக்காடு பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஜீப் டிரைவரை மோட்டார் வாகன துறையினர் பிடித்தனர். அவர் மீது சாலை சட்ட மீறல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது போன்று மறையூர், காந்தளூர், மூணாறு போன்ற சுற்றுலாப் பகுதிகளில் ‘ஆபரேஷன் சஃபாரி’ பரிசோதனையில் கடந்த ஒரு வராத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர்களின் இந்த அலட்சிய போக்கு தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் வரை சஸ்பண்ட் செய்யபடும் என்று மோட்டார் வாகன துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post மூணாறு மலை பகுதியில் அஜாக்கிரதையாக ஜீப் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Munnar Hills ,Munnar ,Idukki district ,Kerala ,Karayur ,Vatavadai ,Vagaman ,Munnar hill ,
× RELATED மூணாறில் களைகட்டத் தொடங்கிய கோடை சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி