×

திண்டுக்கல்லில் பிப்.23ல் கடன் வசதியாக்கல் நாள் கூட்டம்

திண்டுக்கல், பிப். 17: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கடன் வசதியாக்கல் நாள் பிப்.23ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கடன் வசதியாக்கல் நாள் பிப்.23ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் கடைபிடித்திடுமாறு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கடன் வசதியாக்கல் நாள் பிப்.23ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சுயதொழில் கடன் திட்டங்களில் விண்ணப்பித்து வங்கிகளில் பரிசீலனையில் உள்ளவர்களுக்கு கடன் ஒப்பளிப்பு ஆணைகள் வழங்குவது, மக்களுடன் முதல்வர் திட்டத்தில் விண்ணப்பித்திருப்போர்களுக்கு கடன் ஒப்பளிப்பு, கடன் பட்டுவாடா செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் அனைத்து வங்கி மேலாளர்களும் கலந்து கொள்ள இருப்பதால் தொழில் முனைவோர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு கடன் பெறுவதில் ஏற்படும் இடர்பாடுகளை களைந்து, பெரிய தொழில் அதிபர்களாக மாறி வாழ்வில் முன்னேற இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் பிப்.23ல் கடன் வசதியாக்கல் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Day ,Dindigul ,Collector ,Boongodi ,Dindigul Collector ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...