×
Saravana Stores

திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 19ல் நடக்கிறது

திண்டுக்கல், ஜூலை 14: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 19ம் தேதி வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானிய திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்கள், பட்டுப்புழு வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் பெற ஆலோசனைகள், முன்னோடி வங்கிகள் மற்றும் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களின் மூலமும் விவசாயிகளுக்கு கடன் சம்பந்தப்பட்ட விளக்கங்களும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த, கோரிக்கைக்களுக்கு தீர்வு காணலாம். இத்தகவலை கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 19ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Grievance ,Dindigul ,Farmers Grievance Day ,Dindigul Collector ,Office ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் நவ.5ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்