×

தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

 

துரைப்பாக்கம்: சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் காணாமல் போவதாகவும், இதேபோல் சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, வாகனங்களின் பேட்டரி திருட்டு, இரும்பு திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடப்பதாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு ஆய்வாளர் மங்களாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, 6வது தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (எ) உஜால்(21), சக்திவேல்(18), ராஜதுரை(23) ஆகிய 3பேரை கைது செய்தனர்.
கைதான 3 பேரை போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Choshinganallur ,Chennai ,Chozinganallur ,
× RELATED தனியார் கடல்சார் கல்லூரியில் மாணவர்...