×

குழந்தை இல்லை என கேலி செய்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பூர்: பெரம்பூர் மங்களபுரம் கிருஷ்ணதாஸ் ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் செல்வம் (26), மனைவி பிரேமா. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது, குழந்தை இல்லை. செல்வம் வானகரத்தில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்தார். செல்வத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றவர் இரவு 8 மணிக்கு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் தனது மனைவியிடம் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நமக்கு குழந்தை இல்லை என உடன் பணி புரிபவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என சோகமாக கூறியுள்ளார். இதனையடுத்து இரவு 10 மணிக்கு பெட்ரூமில் படுக்கச் சென்றார். அவரது மனைவி வெளியில் உள்ள ஹாலில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு பிரேமா எழுந்து பார்த்தபோது, படுக்கையறையில் செல்வம் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரேமா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செல்வத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குழந்தை இல்லை என கேலி செய்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Selvam ,Prema ,Mangalapuram Krishnadas Road First Street, Perambur ,Vanagaram ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது