×

சமாதான திட்டம் கால நீட்டிப்புக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு

சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: வணிகர்களுக்கும் அரசுக்கும் சுமுகமான ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக வேட் சமாதானத் திட்டம் ஒன்றை தமிழக அரசு கடந்த அக்.16ம் தேதியில் அறிவித்து, பிப்.15ம் தேதியுடன் முடிவடைவதாக அரசு அறிவித்திருந்தது. கால நீட்டிப்பு வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை வைத்திருந்தது.

தற்போது வரை ரூ.170 கோடி வரை அரசுக்கு வருவாய் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஆனாலும் வணிகர்களுக்கும் அரசுக்கும் உள்ள இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள சமாதான திட்டத்திற்கு கால நீட்டிப்பு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மார்ச் 31ம் தேதிவரை அரசு அவகாசம் அளித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், கால நீட்டிப்புடன் 2017க்கு பிறகு தணிக்கை செய்யப்படாத வணிகர்களின் கணக்குகளையும் சமாதானத் திட்டத்தில் பங்கேற்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்.

The post சமாதான திட்டம் கால நீட்டிப்புக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Federation of Trade Unions ,Chennai ,Federation of Merchants Associations ,President ,Wickramaraja ,Tamil Nadu Government ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு வணிகம்...