×

கே.பாலகிருஷ்ணன் விளக்கம் தேர்தல் பத்திரம் மூலம் மார்க்சிஸ்ட் நிதி பெறவில்லை

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை துவக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தின் மூலம் ஒரு பைசா கூட மார்க்சிஸ்ட் கட்சி நிதி பெறவில்லை. அதற்கான சிறப்பு வங்கி கணக்கையும் துவக்கவில்லை.

அந்த திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று அந்த திட்டத்தை ரத்து செய்ய வைத்திருப்பது மார்க்சிஸ்ட் கட்சி. இந்நிலையில், தேர்தல் பத்திர திட்டம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியும் நிதி பெற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது மட்டுமின்றி உண்மைக்கும் புறம்பானது. இது மார்க்சிஸ்ட் கட்சியை திட்டமிட்டு களங்கப்படுத்துவதற்கான உள்நோக்கம் கொண்டதாகும்.

The post கே.பாலகிருஷ்ணன் விளக்கம் தேர்தல் பத்திரம் மூலம் மார்க்சிஸ்ட் நிதி பெறவில்லை appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Marxists ,Chennai ,State Secretary of ,Marxist Party ,Indian Marxist Party ,Dinakaran ,
× RELATED உளவுத்துறை அறிக்கையால் மோடிக்கு...