×

4 மாஜி அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசை கண்டித்து கடந்த 2023 ஜனவரி 2ம் தேதி, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் அதிமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post 4 மாஜி அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,AIADMK ,KP Munusamy ,Vijayabaskar ,Thangamani ,Dindigul Srinivasan ,Natham Viswanathan ,Tamil Nadu government ,Karur ,Dinakaran ,
× RELATED யூடியூபருக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது ஐகோர்ட் உத்தரவு