×

நோட்டாவை விட பரிதாப நிலைதான் தென் மாநிலங்களில் பாஜ பருப்பு வேகாது: அண்ணாமலையை விளாசிய விந்தியா

பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் திருவள்ளுவர் திடல், கோட்டூர் ரோடு, மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகை விந்தியா பேசியதாவது: தமிழகத்தில் பாஜ ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை கூறி வருகிறார். இப்போது எழுதி வைத்துக் கொள்ளுங்கள், தமிழகத்தில் நோட்டாவுக்கு விழும் ஓட்டு கூட பாஜவுக்கு கிடைக்காது.

நோட்டாவை விட பரிதாப நிலைக்கு பாஜ போய் விடும். அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், பாஜவில் இணைத்து விட்டதாக அண்ணாமலை வீராப்பு கொள்கிறார். ஐயோ பாவம், வயதானவர்களை முதியோர் இல்லத்திற்கு சேர்த்தால் கூட அந்த புண்ணியம் கிடைக்கும். அந்த அளவிற்கு பாஜ நிலை உள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, தென் மாநிலங்களில் பாஜ பருப்பு வேகாது. தமிழகத்தில் பாஜ ஆட்சி மலராது. அண்ணாமலை எண்ணமும் பலிக்காது. மதவாத அரசியலை பாஜ கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post நோட்டாவை விட பரிதாப நிலைதான் தென் மாநிலங்களில் பாஜ பருப்பு வேகாது: அண்ணாமலையை விளாசிய விந்தியா appeared first on Dinakaran.

Tags : southern states ,Vindhya ,Annamalai ,Pollachi City AIADMK ,Tiruvalluvar Thital ,Kottur Road ,Central Bus Station ,Vinthia ,Tamil Nadu ,NOTA ,BJP ,
× RELATED பொய் வாக்குறுதி தரும் பாஜவையும்...