×

ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில், காஞ்சிபுரம் அருகே உள்ள வேளியூர் கிராமத்தில் விவசாய தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். சம்பத், ஜோதி, ஆனந்தவேல், பச்சையப்பன், செல்வகணபதி, ரங்கநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க மாநில தலைவர் சண்முகம் கலந்துகொண்டு, விவசாய விலைப்பொருளை குறைந்தபட்ச ஆதாரங்களை வழங்குவதை சட்டமாக்கு, விவசாய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு, ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், டெல்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்தில் ஒன்றிய அரசு ஒத்துக்கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

விவசாய போராட்டத்தில் இறந்துபோன விவசாயிகள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வளர்ச்சி என்ற பெயரில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை அனுமதி வழங்குவதை தடை செய்ய வேண்டும். மேலும் ரயில்வே, வங்கி, மின்சாரம், போக்குவரத்து, எல்ஐசி, கூட்டுறவு வங்கி போன்ற பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு, நிர்வாகிகள் சுகுமாரன், நந்தகோபால், ஆனந்தன், முருகேசன், செல்வம், செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதோபோல், காஞ்சிபுரம் மாவட்ட தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடிடியுசி விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கம் உள்ளிட்ட கூட்டமைப்பு இணைந்து ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர்களை நசுக்குவதை கண்டித்தும் காஞ்சிபுரம் தேரடியில் இருந்து காந்தி ரோடு வழியாக ஊர்வலமாக வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொமுச காஞ்சி மாவட்ட தலைவர் கவுன்சில் தலைவர் இளங்கோவன், சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். விசிக மாவட்ட செயலாளர் எழிலரசு, ஏஐடியுசிஏ நிர்வாகி மூர்த்தி, ஏஐசிசிடியு நிர்வாகி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், விவசாயிகளை நசுக்கும் ஒன்றியம் அரசு ஒருசில தனியார் கார்ப்பரேட்களிடம், அரசு நிறுவனங்களை தாரை வார்த்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், பாலியல் குற்றங்கள் ஈடுபடுபவர்களை பாதுகாத்திட அரசாகும் செயல்படுகிறது உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொமுச மாவட்ட செயலாளர் சுந்தரவரதன், சுதாகரன், அரசு மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதர், பாசறை செல்வராஜ், மதிஆதவன், வெங்கடேசன், குமார், திருநாவுக்கரசு, வெங்கடேசன், அசோக் குமார், வரதன், ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்போராட்டம் பெரியார் தூண் அருகே வந்தபோது பேரணியை, போலீசார் தடுத்து நிறுத்தி 600 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Kanchipuram ,Tamil Nadu Farmers' Association ,Veliyur village ,Sarangan ,Farmers Association ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்