×

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியின் சமூகப் பங்களிப்பு

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல்வேறு சமூக விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி சமூகத்திற்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. அதை மெய்ப்பிக்கும் வண்ணம் கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில் கல்லூரியின் கணக்கியல் மற்றும் நிதித்துறை மற்றும் ஃபின்டெக் கிளப் இணைந்து சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல நிறுவனத்தில் ‘கருணையின் கரம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் துறைப் பேராசிரியரும், 16 மாணவர்களும் அந்நிறுவனத்திற்கு வருகை புரிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்கள், போர்வைகள், துண்டுகள் உள்பட பல்வேறு பொருட்களை வழங்கினர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையை இளைஞர்களிடையே உருவாக்கும் விதமாகவும் சமூக அர்ப்பணிப்பைப் பதிவு செய்யும் விதமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.

The post திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியின் சமூகப் பங்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvekadu S.A. Community ,Tiruvallur ,S.A. ,Tiruvekkat ,Chennai ,College of Arts and Science ,P. Venkatesh Raja ,Thiruvekadu S.A. ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு