×

பிரியங்கா காந்திக்கு உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி; காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் நுழைந்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதியாத்திரையை வரவேற்று அதில் பங்கெடுக்க இருந்தார். ஆனால் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து உபியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் மற்றும் தொண்டர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

The post பிரியங்கா காந்திக்கு உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,New Delhi ,Congress ,General Secretary ,Rahul Gandhi ,India Unity Yatra ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED குழந்தை மாதிரி மோடி அழுகிறார்: பிரியங்காகாந்தி சாடல்