×

கடலில் மூழ்கி காதலன் சாவு மாணவி தீக்குளிப்பு

கும்பகோணம்: கடலில் மூழ்கி காதலன் உயிரிழந்ததால் மாணவி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (22). அரசு பெண்கள் கல்லூரியில் முதுகலை 2ம் ஆண்டு படித்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த நவீன்குமார் (23) என்பவரை கீர்த்தனா காதலித்து வந்ததாகவும், கடந்த மாதம் தரங்கம்பாடி கடலில் மூழ்கி நவீன்குமார் உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தனா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

The post கடலில் மூழ்கி காதலன் சாவு மாணவி தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Keerthana ,Thanjavur district ,Government Girls' College ,
× RELATED நடுரோட்டில் பைக்கை நிறுத்தி...