×
Saravana Stores

முருங்கைக்கீரை ஆம்லெட்

தேவையானவை

முருங்கைக் கீரை – ஒரு கப்
முட்டை – 3
வெங்காயம் – ஒன்று
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்ப் பூ – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
மல்லித் தழை – சிறிது (கறிவேப்பிலை அளவு)
சீரகம் – கால் தேக்கரண்டி

செய்முறை :

முதலில் வெங்காய த்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட் களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை கொரகொரப் பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.அத்துடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும். ஒரு அகன்ற கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும் தவாவை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.

The post முருங்கைக்கீரை ஆம்லெட் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி