×

மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம் செய்த வழக்கு: காவல்துறை விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம் செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ செல்வராஜுக்கு எதிராக பதிவான வழக்கில் காவல்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன் மீது அளிக்கப்பட்ட புகாரில் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம் செய்த வழக்கு: காவல்துறை விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Chennai ,Chennai High Court ,AIADMK ,MLA ,Selvaraj ,Municipal Commissioner ,ICourt ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...